சில நாட்களுக்கு
முன்னர் தமிழ்மணத்தில் இருந்து சில சுட்டிகளை சொடுக்கிய போது வலைமனைகள் திறந்தாலும்
தளங்களை பார்க்கமுடியாமல் இருந்தது. ஏனெனில் அத் தளங்கள் தன் பாட்டிலே அடிக்கடி
refresh பண்ணியபடியே இருந்தன. நான் என் கண்ணில் தான் எதோ பிழை என்று போட்டு போய் படுத்து
தூங்கிவிட்டேன்.
இன்றைக்கும் அதுபோலவே
நடந்தது. அதனாலே தான் இந்தப்பதிவு. அனேகமாக எதாவது plugin களில் பிரச்சனை இருக்கும்
என நம்புகிறேன். Crome, Firefox, IE எல்லாவற்றிலும் இதே மாதிரி தான். எனது கணனியிலும்
கண்ணிலும் பிழை இல்லை என்றே தெரிகிறது. சுட்டிகளை
தனியே எடுத்து பாவித்தாலும் இந்த் effect வருகிறது.
சம்பந்தமான பதிபவர்களுக்கு
பின்னூட்டம் அனுப்பவே முடியவில்லை. இப்படி பிரச்சனை தெரிந்த சில சுட்டிகளை தந்திருக்கிறேன்.
பதிபவர்கள் படித்தால் வலைமனைகளை சரி பார்த்து கொள்ளவும். கூகிள் கூகிள்...இல தேடிப்பார்த்தேன்
இது பற்றி ஏதும் தகவல்கள் கிடைக்கவில்லை.
இச் சுட்டிகளில்
சிலவற்றிற்கு நான் முன்பு போயிருக்கிறேன். அப்போது சிக்கல் இலாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பிரச்சனை எனக்கு மட்டும் தெரிகிறது என்றால் மன்னித்து மறக்கவும். உங்களில் யாருக்காவது
தெரிந்தால் பின்னூட்டமிடுங்கள்.
ஒகோ புரடக்சன்
: http://ohoproduction.blogspot.co.uk
தமிழா தமிழா :
http://tvrk.blogspot.co.uk
6 விமர்சனங்கள்:
ஓகோ புரடக்சன் வலைக்குப் போய் பார்த்தேன். ரகளை பண்ணுகிறது. சனியன்களை ஒரக்கட்டிவிட்டு வேறு தளங்களைப் பாருங்கள்.
சகோ ப்ளாக்கர் தளங்கள் அண்மையில் நாடு வாரியாக டொமைன் மாற்றம் செய்ததால் வந்த வினை.உதா www.koadangi.blogspot.ca என்பதை www.koadangi.blogspot.com/ncr என் மாற்றி முயற்சியுங்கள். இறுதியில் .com/ncr என வரவேண்டும்
அநேக தளங்களில் கடந்த சில தினங்களாக இப்படி பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் முக்கியமாக கூகுல் ப்ளஸில் இணைந்திருக்கும் பதிவாளர்களின் பதிவுகளில் இந்த பிரச்சனைகள் தோன்றுவதாக தெரிகிறது....அதற்கான விடையை நான் எதிர்பார்த்து கொண்டிருக்கிறென்
எனக்கும் அப்படிதான்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பழனி.கந்தசாமி ஐயா.
சில தளங்களை குறிப்பிட்டது அந்த வலைமனை ஆசிரியர்களுக்கு உஅதவியாக இருக்க!
மிக்க நன்றி இக்பால் செல்வன் அவர்களே. நீங்கள் கூறுவது ஒரு சரியான கருத்தே. நாடு வாரியாக டொமைன் மாற்றம் செய்த பிறகு எனது வலைமனையின் தமிழ்மணம் plugin கூட இயங்க மறுக்கிறது.
மதுரைத்தமிழன் இது கூகுல் ப்ளஸில் இணைந்திப்பதாலா தெரியவில்லை, நான் இது பற்றி கூகுல் ப்ளசோடு சேர்த்து நிறைய தே டிப் பார்த்தேன். ஒரு தகவ்லும் கிடைக்கவில்லை. கூகுல் ப்ளஸில் இணையவே நிறைய ஆங்கில வலைமனைகள் சொல்கின்றன. பார்ப்போம்!
நன்றி கரிகாலன். அப்ப என் கண்ணில் பிழை இல்லை....;)
சொல்லமறந்தது: பல பிரபல பதிபவர்கள் வந்து பினூட்டம் இட்டதால் என் சிறு வலைமனை பெருமையடைகிறது!
Post a Comment