நான்:
நீண்ட காலத்திற்கு பிறகு தமிழ்படம் பார்க்க திரையரங்கு செல்ல முடிந்தது. தவிர இந்தப் படத்திற்கும் எனக்கும்  இரண்டு சிறப்பு தொடர்புகள். நான் முதல் முறையாக  தமிழ் படம் வெளிவந்த முதல் நாளே பார்த்தது. அடுத்தது முதல் முறையாக விஜயின் படம்  திரையரங்கில் பார்த்தது!. 9 மணி படத்திற்கு எட்டு மணிக்கே சரியான சனம். இலண்டனில் எல்லா திரையரங்குகளிலும் டிக்கட் முதல் நாளே விற்று முடிந்து விட்டதாம் [எந்திரனுக்கு பிறகு இது தான் முதல் தடவை இப்படி நடந்ததாம்]. 

திரையரங்கு நிறைய ஆட்களுடன் இருந்து படம் பார்த்து சரியான பம்பலாக இருந்தது. விஜய் பாட்டுடன் ஆரம்பபமாகின்ற காட்சியில் பாட்டிகளில் வெடிக்கிறதையும் யாரே வெடிக்க வைத்து காகித மழையும் பொழிந்தனர். ஒவ்வொரு விஜய் சீனுக்கும் ஓ போட்டனர் லண்டன் விஜய்  ரசிகர்கள். நான் படங்களை தனியே  பொழுது போக்கிற்காக மட்டுமே பார்ப்பதால் எனக்கு படம் பிடித்திருந்தது. விஜய் படத்தில் கூட லொள்ளுகளை எதிர் பார்த்து போனதால் லொஜிக் மீறல்கள் தெரியவில்லை. 


கஜால் அகர்வால்

நடிப்புக்கும் இவாக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஒரிரண்டு காதல் சீன்கள் மட்டும் கிடைத்தாலும் சிலர் score பண்ணுவினம். ஆனால் கஜால்......படத்திலும் வெயிட் இல்லாத ரோல்.  சில சீன்களில் விஜய்க்கு அக்கா மாதிரி இருக்கிறா! திரிஷா அல்லது தமனாவை நடிக்க வைத்திருக்கலாம் என்பது எனது நண்பர்களின் கருத்தாக இருந்தது.



விஜய்

வாவ், நண்பன் பட்த்தின் பின்னரான எதிர்பார்ப்பை சரியாக தந்திருக்கிறார் விஜய். அலட்டல் இல்லாத நடிப்பு, அருமையான நடனம், வயதாகாத உடற்கட்டு என நல்ல கீரோக்கான் தகுதிகள் இருக்கு. நல்ல இயகுனர்களின் விதியாசமான படங்களை எடுத்து நடித்தால் இன்னொரு வட்டம் வரலாம் என்பது என் கருத்து. கடைசிக் கட்டத்தில் சுளுக்கு எடுக்கும் காட்சியில்  கில்லி பட பாதிப்பை தவிர்த்திருக்கலாம். 

துப்பாக்கி:
இந்த ஆண்டில் பெரிய மாஸ் கீரோக்களின் வெற்றிப் படங்கள் பெரிதாக ஏதும் இல்லாத்தால் துப்பாக்கி நன்றாகவே வெடிக்கிறது. இந்த நேரம் வேறு போட்டிப் படங்கள் இல்லாத்தும் வெற்றிக்கு காரணமாக இருக்கலாம். தொலைக்காட்சியில் [திரையரங்கு factor இருக்காது] பார்த்தால் சாதாரணாமான படமாக இருக்குமோ தெரியாது. 

பாட்டுகள் பறவாயில்லை. எல்லாம் முன்பே கேட்ட மாதிரி இருந்தன. ஒளிப்பதிவு அபாரம். கதை கிதை எல்லாம் தமிழ் படங்களில் கேட்ககூடாது ஆமா! அப்புறம் அழுதுவிடுவேன்!

இறுதியாக,  குண்டு வைக்கிற வில்லன வாற படங்களில் எல்லாம் ஒரு குறித்த சமையத்தவரை காட்டுவதை இனியாவது தவிர்த்தால் நல்லம். 

எனது மதிப்பெண்கள் 62/100.

படம் இன்னும் பார்க்கவில்லை என்றால் திரையில் பார்க்கலாம். பார்க்க முதல் நான் எழுதிய முன்னேட்டத்தை படித்து பார்க்கலாம். முருகதாஸ்சுக்கு நல்லகாலம் நான் எழுதிய பஞ் ஒண்டும் படத்தில் வரவில்லை....! (வழக்கு போட்டிருப்போம்ல?)



சில நாட்களுக்கு முன்னர் தமிழ்மணத்தில் இருந்து சில சுட்டிகளை சொடுக்கிய போது வலைமனைகள் திறந்தாலும் தளங்களை பார்க்கமுடியாமல் இருந்தது. ஏனெனில் அத் தளங்கள் தன் பாட்டிலே அடிக்கடி refresh பண்ணியபடியே இருந்தன. நான் என் கண்ணில் தான் எதோ பிழை என்று போட்டு போய் படுத்து தூங்கிவிட்டேன்.

இன்றைக்கும் அதுபோலவே நடந்தது. அதனாலே தான் இந்தப்பதிவு. அனேகமாக எதாவது plugin களில் பிரச்சனை இருக்கும் என நம்புகிறேன். Crome, Firefox, IE எல்லாவற்றிலும் இதே மாதிரி தான். எனது கணனியிலும்  கண்ணிலும் பிழை இல்லை என்றே தெரிகிறது. சுட்டிகளை தனியே எடுத்து பாவித்தாலும் இந்த் effect வருகிறது.

சம்பந்தமான பதிபவர்களுக்கு பின்னூட்டம் அனுப்பவே முடியவில்லை. இப்படி பிரச்சனை தெரிந்த சில சுட்டிகளை தந்திருக்கிறேன். பதிபவர்கள் படித்தால் வலைமனைகளை சரி பார்த்து கொள்ளவும். கூகிள் கூகிள்...இல தேடிப்பார்த்தேன் இது பற்றி ஏதும் தகவல்கள் கிடைக்கவில்லை.

இச் சுட்டிகளில் சிலவற்றிற்கு நான் முன்பு போயிருக்கிறேன். அப்போது சிக்கல் இலாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பிரச்சனை எனக்கு மட்டும் தெரிகிறது என்றால் மன்னித்து மறக்கவும். உங்களில் யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டமிடுங்கள்.

ஒகோ புரடக்சன் : http://ohoproduction.blogspot.co.uk
தமிழா தமிழா : http://tvrk.blogspot.co.uk
கவிதை வீதி: http://kavithaiveedhi.blogspot.co.uk




இன்று தீபாவளிப் பண்டிகை. தமிழர் குடும்ப சமுக கலாசார பண்பாட்டு நாட்களில் முக்கியமானதாக இருக்கும் தினம் இது. தீபங்களை வரிசையாக (வளி) வைத்து அழகு படுத்தும் பண்டிகை என்ற காரணப் பெயராக தீபாவளி அமைகிறது. உலகத்தில் வாழும் அனைத்து இந்துக்களும்  நாடு பேதமின்றி கொண்டாடுவது இந்த ஒரு பண்டிகைதான். இப்போது இந்துக்கள் வாழும் பல் புலம் பெயர் நாடுகளில் அன்னிய நாட்டவரும் சேர்ந்து கொண்டாடும் காட்சிகளும் காண முடிகிறது.

கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை அழித்த நாள் என்று தென் இந்தியாவிலும் தசரத இராமன் இராவணை வதம் செய்து நாடு திரும்பிய நாள் என்று வட இந்தியாவிலும் இதனை கொண்டாடுவார்கள். மொத்ததில் ஒரு நன்மை நடந்த நாளாகவே இத் திருநாள் கருதப்படுகிறது. தீபங்கள் இருளை விரட்டி ஒளியைத் எல்லா இடமும் பரப்புவதாலே தீபாவளியில் தீபங்கள் முக்கிய இடம் பெருகிறது.

இப்பண்டிகை வட நாட்டவரின் பண்டிகை என்றும் தமிழனாகிய நரகாசுரனை  அழிக்கப்பட்ட நாளாதலால் இதை கொண்டாடக் கூடாது என்றும் ஒரு சிலர் கருதுகின்றனர். கிருஷ்ணரை தமிழ் இந்துக்களின்  கடவுளாக ஏற்றால் பண்டிகையையும் ஏற்கவேண்டும் என்பது என் வாதம்.

முன்பு ஊரில் தந்தை தாய், ஏழு சகோதரங்களுடன் ஒரே வீட்டில் வாழ்ந்த் நேரம் தீபாவளி வந்தால் வீடே அல்லோல கல்லோலப்படும். காலையில் நான் சிறியவன் என்பதால் ஒரு புதுச்சட்டை கிடைக்கும். எல்லோரும் நீராடி புது உடுப்பு போட்டு ஐயாவுடன் கோவில் சென்று முத்துமாரி அம்மன் தரிசனம் முடித்து வர வீட்டில் அக்கா பொங்கள் செய்திருப்பா. சாப்பிட்டு இனித்திருப்போம். அனேகமாக நெருங்கிய சொந்தங்கள் வீடு வந்து போவினம்.

இப்ப வேலை நாட்களில் என்றால் வேலை முடித்து வந்து கோவிலுக்கு போய்வந்து ஒரு பொங்கலேடு பண்டிகை முடிந்துவிடும்.  சில வருடங்களாக ஒரு பெரிய தட்டம் நிறைய தண்ணிர் நிரப்பி நடுவில் ஒரு கிருஷ்ணர் வைத்து சுத்திவர பூவும் சிறிய மெழுகுதிரிகளும் வைத்து பூஜை அறையை ஒளியூட்டுவது என் பழக்கம். தீபஙகள் வாழ்க்கைக்கு ஒளி தரும் என்ற நம்பிக்கை தான்!

அனைவருக்கும் இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்

1 – அனேகமாக பேய் பெண்ணாக இருக்கும் ஆனால் அடித்தால் பேயடியாக இருக்கும். மலையாள மாந்திரிகர்களை தவிர யாருக்கும் கட்டுப்படாது. பேய் கடவுள் சிலையை கண்டால் நடுங்கும். இந்த பேய் விரட்டும் மாந்திரீகர்கள் எப்பவும் பேயைவிட பயங்கரத் தேற்றமாக இருப்பினம்.


2 –துப்பாக்கி குண்டுகள் ஆட்களை பார்த்துத் தான் தாக்கும். கதாநாயகர்களை ஒன்றுமே செய்வதில்லை. மற்றவையை ஐம்பதடி தூரத்தில் நின்று சுட்டாலே உயிரை குடிக்கும்.

3 – இளம் பெண்கள் எப்பவும் ஒன்றில் சரியான கோபக்காரியாகவோ அல்லது வெகுளியாகவே ( லூசு ) இருப்பினம். அனேகமான தமிழ் பெண்கள் கவர்ச்சியாகவே உடுப்பு போடுவினம்.

4- அரசியல்வாதிகள் எப்பவும் வேட்டி கட்டியிருப்பினம். அனேகமான அரசியல்வாதிள் குண்டாக இருப்பினம். காசெ’ண்டால் கொலையும் செய்வினம் அவை.


5 – கோவில் போகும் பெண்கள் சேலை மட்டுமே அணிவார்கள். கட்டாயம் கையில் அர்ச்சனை தட்டு எடுத்துச் செல்வர்

6 – ஒரு ஆண் ஒரு பெண்ணின் எந்த பாகத்தை தொட்டாலும் பெண் கனவு காண்பது வழக்கம். கனவில் எந்த சாரிகள் ஆபரணங்கள் அணிந்திருந்தேன் என்று ஞாபகம் வைத்து பிறகு மற்றவைக்கு சொல்வது அவர்கள் வழக்கம். கனவில் மட்டும் அவர்களை எங்கே தொட்டாலும் அவர்களுக்கு பிரச்சனையில்லை.

7- நீதிபதிகள் எப்பவும் பயந்தவர்கள். வக்கீகள் காசுப் பேய்கள்.

8. அனேகமான ஆண்கள் சரியான அடிதடி காரர். ஆ ஊ எண்டேலே கையை நீட்டி விடுவினம். அனேகமான அடியாட்கள் சோம்பேறிகள், பயந்தவர்கள்.

9. பணக்கார்ர் எல்லோரும் எமாற்றுக்காரர்கள். அனோகமான பணக்காரரின் பணம் கருப்பு.

10 அனேகமான ரோட்டில் ஸ்பீட் லிமிட் இல்லை. எவ்வளவு தூரம் ஓடினாலும் காருக்கு பெற்றோல் மட்டும் முடியாது

11  அரிவாட்களை வீடுகள், வியாபாரத் தலங்களிலும்  செருகிவைப்பது தமிழர்கள் வழக்கம்.

12. என்ன பிரச்சனை என்றாலும் யாரும் சொல்லாமலே காவல் துறை வந்துவிடும். ஆனால் பிரச்சனை முடிந்தபின்னர் தான் எப்பவுமே வருவார்கள். காவல் துறை யாரையும் எப்போதும் என்னவும் செய்யல்லாம்.

13. எல்லா ஊர் எல்லையிலும் தவறாமல் ஒரு ஐயநார் கோவில் இருக்கும். அங்கு ஈசியாக புடுஙக்க் கூடியதாக சூலங்கள் நட்டிருப்பினம் (இது கொஞ்சம் பழசோ?)

14. வடிவான பெண்களுக்கு எப்பவும் ஒரு வடிவில்லாத அல்லது ஒரு வெகுளிப் பெண் நண்பியாக இருப்பா. அந்த நண்பி எப்பவும் ஒரு வடிவிலாத அல்லது ஒரு வெகுளிப் பையனை மணப்பது வழக்கம்.

15. சில பல்கலைக் கழகங்களிலும் காலேஜ்களிலும் எவ்வளவு அரியர்ஸ் வைச்சாலும் வீட்டை அனுப்ப மாட்டினம். காலேஜ்களில் வயதெல்லை இல்லை.


16. கடத்தல் கார டான்கள் எத்தனை கொலையும் செய்யல்லாம். அது தெரிய வராது. கடைசியில் ஒரு ஈ, காக்காவை அடிக்கும் போது மாட்டுவினம்.

17.  அனேகமான பார்களில் பெண்களின் நடனம் சர்வ சாதாரணம். யாரும் எப்போதும் சும்மாவே போய்வரலாம்.

18 நல்ல பாடல்கள் பின்ணணியில் போனால் பிள்ளைகள் அதி விரைவாக வளருவினம், ஆண்டி அரசனாகலாம். குக்கிராமம் நகரம் ஆகலாம்.



19. ஒத்த இரட்டையர்கள்  எப்பவும் வேறு வேறு தோற்றத்தில் இருப்பர். எப்பவும் ஒருவர் நல்லவராகவும் ஒருவர் கெட்டவராகவும் இருப்பது வளமை.



ஆமா உங்களுக்கும் இதுபோல கனக்கத் தேன்றுமே? பின்னூட்டத்தில் எழுதிவிடுங்கோ!!

கதைகள் சொல்லும் இந்த படங்களைப் பாருங்கள்!

பிடிச்சுக்கடா, நான் காப்பாற்றுவேன் உன்னை!

நீயா நானா? சரியான போட்டி

பெற்றால் தான் பிள்ளையா?

என்னடா செல்லம் உன் பிரச்சனை?

அம்மாவே தெய்வம்.....


நட்பு எதுவென்று மனிதருக்கு பாடம் கற்பிப்போம் வா!

தலையின் பாதை நம் பாதை!

பிடிச்சிருக்கா? இல்லையா சொல்லுங்க!!


இளைய தளபதி விஜய் நடிக்கும் துப்பாக்கி இன்னும் சில தினங்களில் வெளிவர இருப்பது அறிந்தததே.  இயக்குனர் A.R. முருகதாஸ் தயாரிக்கும் இப் படத்தில்   விஜய்க்கு ஜோடியாக கஜோல் அகர்வால் நடிக்க  சரத்குமார், ஜெயராம், சத்யன், வித்யுத் ஜாம்வால் ஆகியோரும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். ஒலிப்பதிவை சந்தோஷ் சிவன் செய்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ்  இசையில் ஆறு பாடல்களும் ஒரு தீம் மியூசிக்கும் வெளிவிடப்பட்டிருக்கின்றன. (பாடல்கள் கீழே)

 நண்பன் பட வெற்றிக்குப் பிறகு வரும் படம் எனபதாலும் முருகதாஸின் இயக்கம் என்பதாலும்  விஜய் ரசிகர்கள் மட்டும் அல்லாது எல்லோரிடமும் பலத்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. பாடகி ஆந்திரியாவுடன் இணைந்து விஜய் ஒரு பாட்டையும் பாடி இருக்கிறார்.

மும்பாய் பின்னணியில் அமைந்த இப் படத்தில் விஜய் இரண்டாம் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த துப்பாக்கி வெடிக்குமா வெடிக்காதா என்று இன்னும் சில் நாட்களில் தெரிந்துவிடும். we are waiting!


படங்கள் உங்கள் பார்வைக்கு:

இந்தப்படத்தில் பஞ் வசனங்கள் இல்லை என்று முருகதாஸ் சொல்லியிருந்தார். ஆனாலும் நான் நாலைந்து எழுதியிருக்கிறேன். நல்லா இருந்தா கருத்த எழுதுங்கண்ணா!



த(ல)லைக்கு சுட்டா அது சூடு. துப்பாக்கிக்கே சுட்டா?


இந்த துப்பாகிக்கு இரண்டு முகம்டி. இப்ப நீ பாக்கிறது இரண்டாவது முகம்!!


பொலிஸ் வேசம் போட்டா சுட்டுத் தனே ஆகணும்?....அட நீ ஆடு


மற்றவங்க துப்பாக்கி சுட்டா அது வெடிக்கும். துப்பாக்கியே துப்பாக்கியை சுட்டா?


நீ அழகோ இலலையோ, நான் அழகிய தமிழ் மகன் என்று தமிழ் நாடே சொல்லுது!!



இந்த திரைப்பட முன்னோட்டதை பாருங்க



பாடல்கள்

பாட்டுகள் இன்னும் கேட்கவில்லை என்றால் கேளுங்க அல்லது தரவிறக்கம் செய்யலாம் (பாடல்கள் - நன்றி தமிழ் வயர் தளம்)

Kutti Puli Koottam (Hariharan, Tippu, Narayana, Satyan, Ranina Reddy)
Antarctica (Vijay Prakash, Krish, Rajeev, Devan)
Poi Varavaa (Karthik, Chinmayee)
Google Google (Vijay, Andrea Jeremiah, Joe, Krishna Iyer)
Vennilave (Hariharan, Bombay Jayashri)
Alaikaa Laikaa (Javed Ali, Sayanora Philip, Sharmila)
Alaikish On Mission (Theme)

உங்கட கருத்துகளை பின்னூட்டத்தில் எழுதலாமே?