புகைப்படத் தொழிலின் அடுத்த கட்டம் சினிமாகிராப் (Cinemagraphas) என்று அழைக்கப்படும் அசையும் புகைப்படங்களாகும். புகைப்படங்களின் சில பகுதிக்கு மட்டும் உயிர் கொடுத்து படங்களின் நிஜத்தன்மையை இன்னும் கூட்ட இந்த தொழில் நுட்பம் உதவுகிறது. 

நியூ யோர்க்கின் இரண்டு புகைப்படத்துறைத் தலைகள் சேர்ந்து உலகத்திற்கு கொடுத்தது இந்த தொழில் நுட்ப்பம். ஒரே படமாக (வீடியோ அல்ல) இருப்பதால் வலைத் தள பாவனைக்கு உகந்ததாக இருப்பதோடு இதன் அசையும் சிறிய பகுதிகள் முலம் புகைப்படத்தை இலகுவாக மனதில் பதிய வைக்க இயலும்.

புகைப்படத்தை முதலில் எடுத்து அதே நேரம் படத்தில் அசைவதாக காட்டப்படும் பகுதிகளை மட்டும் அசைத்து வீடியோவும் எடுத்து பின்னர் போட்டோ சொப் மூலம் இணைத்தே இப்படங்கள் உருவாக்கப் படுகின்றன. மிகவும் நுட்பமான புகைப்பட கருவிகளால் இந்த படங்கள் எடுக்கப்பட வேண்டும். 

இத் தொழில் நுட்பம் இந்தியாவுக்கு வந்தால் விரைவில் சினிமா போஸ்ரரிலேயே ரஜனியின் மானாரிசங்களை காணாலாம்.

கீழே சில படங்கள் உங்கள் பார்வைக்கு. நிழல் மற்றும் கண்ணாடி விம்பங்களில் கூட அசைவை உற்று நேக்குங்கள்.  சில படங்கள் பல நாட்கள் எடுக்கிறதாம் செய்து முடிக்க!









எங்களுக்கிடையில் தூரம்,
காதலுக்கு ஏது தூரம்?
பிரிவுக்கே பிரியாவிடை
கொடுத்தவர்கள் தானே நாங்கள்!

இடைப்பட்ட தூரம்
பலவாயிரம் மைல் என்றாலும்
எதோ ஒரு கோடு
என்னையும் உன்னையும் இணைக்கிறதே!
அதுதான் காதலா?

இது தற்காலிகமானது தான்
பிரிவு தரும் இன்பத்தை
அனுபவித்துக் கொள் - பிறகு
கேட்டாலும் கிடைக்காது!


கந்தையா அண்ணை கனகாலமாக ஒவ்வொரு வெள்ளி இரவும் மதுபான சாலைக்கு (Pub) வருவார். அவர் தனிய வாறது மட்டுமில்லாமல் மூன்று பைந் பியர் (pint of beer) வேண்டி  மாறி மாறி ஒவ்வொரு கிளாசிலில் இருந்தும் அவரே குடிப்பது எல்லாருக்கும் வேடிக்கையாக இருக்கும்.

இப்பிடி வினேதமான பழக்கத்தை பார்த்த அக் கடையின் உதவியாளர் தனது ஆச்சரியத்தை கட்டுப்படுத்த முடியாமல் கந்தையா அண்ணையிடம் கேட்டார். அதுக்கு அவர் சொன்ன பதில் ` எனக்கு  இரண்டு உயிர் நண்பர்கள் இருந்தனர். ஊரை விட்டு வேறு நாடுகளுக்கு போகும் போது நாங்கள் எடுத்த முடிவு இது. எந்த நாட்டில் இருந்தாலும் நாங்கள் சேந்து இருப்பது போல் கிழமையுயில் ஒரு நாள் இப்படி குடிப்பதாக ஒரு சத்தியம் செய்திருக்கிறேன். அவையும் அப்பிடியே செய்வினம்`  உதவியாளர் இப்படி வித்தியாசமான ஒரு ஆள் இந்த உலகத்திலே இருக்கிறார்களா என்று வியந்தபடி போனார்.

கனகாலமாக இது தொடர்ந்த்து.

சில வருடங்களின் பின்னர் ஒரு நாள் கந்தையா அண்ணை மூன்றுக்கு பதிலாக இரண்டு பியர் மட்டுமே வாங்கி மாறி மாறி குடித்தார். அதை கண்ட கடை உதவியாளர் கண் எல்லாம் கலங்க கந்தையா அண்ணைக்கு கிட்ட போய் கேட்டார். உங்கள் இரு நண்பர்களில் ஒராளுக்கு எதாவது நடந்துவிட்டதா? என்று கேட்டார்.

கந்தையா அண்ணையின் பதில் சொன்னார் `அடடா அப்பிடி நினைத்துவிட்டீங்களா? அவங்கள் எல்லாம் சுகமாய்த்தான் இருக்கிறாங்கள் நான் தான் டொக்ரர் சொன்னார் என்று குடிப்பதை நிறுத்தி விட்டேன்.`

தடால்.......!

கடினமான வேலைப் பணிகளுக்கு இடையில் பாடல்களை ரசிப்பது எனது சமீபத்தைய வழக்கம். நேற்று இப்படி பாடல்களை கேட்ட போது எதேட்சையாக ராக தேவனின் `போற்றிப்பாடடி கண்ணே` பாட்டு கேட்ட போது தேவர் மகன் படம் பார்க்கவேண்டும் என்ற ஆவல் பிறந்தது. வேலை முடித்தவுடன் (சத்தியமா) முதல் வேலையாக (இதுவும் வேலை தானே) யூ டியூப்பில் தேடிப்பாக்க படமும் கிடைத்தது ( அவசரப்படாதைங்கோ சுட்டி கீழே ).

தேவர்மகன் படத்தை ஒரே ஒரு முறை கொழும்பில் தொலைக்காட்சியில் பார்த்த ஞாபகம். படத்தின் கடைசிப் பகுதி கூட சரியாக ஞாபகம் இருக்கவில்லை. ஆனால் பட பாடல்களை கன தரம் பார்த்தும் கேட்டும் சுவைத்திருக்கிறேன். இப்போது வந்து கொண்டிருக்கும் கொலை வெறிப் படங்களுக்கிடையில் இது விதியாசமாக இருக்கும் என்ற என் எதிர்பார்ப்பு வீணாகவில்லை (கடைசி காட்சியில் ரத்தம் காட்டுவதை தடுத்திருக்கலாம் – never mind!). எனக்கு தேவர்கள் முக்குலத்தோர் பற்றி எல்லாம் அவ்வளாவக தெரியாத்தால் ( படித்தறிந்தது போக சம்பாசனைகளை கேட்டதோ நேரே பார்த்ததோ இல்லை ) படத்தை இன்னும் கூட இரசித்தேன்.

ஆகா, நிறைய நாட்களுக்கு பிறகு மிக நல்ல படம் பார்த்த திருப்தி கிடைத்த்து. படம் 20 வருடங்களுக்கு முன்பு வந்த படமாகவே தெரியவில்லை. சிவாஜி கணேசன் என்னும் கலைஞனின் நடிப்பின் இன்னொரு பரிமாணம் இப்படம். சிவாஜி சாதாரணமாக ஓவர் ஆக்டிங் என்ற  சொல்லுறவை இதை ஒருக்கா கட்டாயம் பார்க்கவேண்டும். சரியான யதார்த்தமான நடிப்பு.  

கமலின் நட்டிப்பு சொல்லவே தேவை இல்லை. சிவாஜியுடன் நேருக்கு நேர் நடித்த காட்சிலாகட்டும், ரேவதி கௌதமியுடனான காட்சியிலாகட்டும் பிச்சு உதறுறார் (ஆமா இப்ப என்ன நடந்த்து இந்த நல்ல கலைஞனுக்கு). கதாநாயகிகளும் இப்பத்தைய படங்கள் போல இல்லாமல் வந்து தங்கள் நடிப்பு திறமையை காட்டி இருக்கினம். வைகைப்புயலுக்கும் கடி இல்லாத குணச்சித்திர(?) நடிப்பு. 

தேவர் மகனின் ஐயா தேவர் மகனுக்கு (....இது 2 மச் .) ஊருக்கு எதாவது நல்லது செய் என்று சொல்கிற காட்சியில் கண்களில் கண்ணீர். எங்கட ஐயாவின் ஞாபகம் வந்த்து என்றால் பாருங்கோவேன். எங்களுக்கு கிடைத்த இந்த சிந்தனை வெள்ளங்கள் எங்கட அடுத்த தலைமுறைக்கு கிடைக்குமே என்றால் ஐமிச்சம் தான். இந்தக் காட்சியில் வந்த ஒரு வசனம்..(நன்றி : CVR’s blog page)

`போ...செத்துப்போ..நான் தடுக்க முடியுமா??...எல்லா பயபுள்ளையும் ஒரு நாள் சாக வேண்டியதுதான். வாழறது முக்கியம் தான் ..இல்லைன்னு சொல்லல.ஆனா மத்தவங்களுக்கு பயனுள்ள வாழ்க்கையா வாழ்ந்துட்டு செத்து போனா அந்த சாவுக்கே பெருமை. வெத வெதைச்சவுடனே பழம் சாப்பிடனும்னு நெனைக்க முடியுமோ...இன்னைக்கு நான் வெதைக்கறேன்.நாளைக்கு நீ பழம் சாப்பிடுவ..அப்புறம் உன் பையன் சாப்பிடுவான்..அதுக்கப்புறம் அவன் பையன் சாப்பிடுவான்...அதெல்லாம் பாக்குறதுக்கு நான் இருக்க மாட்டேன்.ஆனா வெத..நான் போட்டது.இதெல்லாம் என்ன பெருமையா??? கடமை ஒவ்வொருத்தரோடைய கடமை!!!.`



இதுவரைக்கும் யாராவது இன்னும் பார்க்கவில்லை என்றால் கண்டிப்பா ஒருக்கா பாக்கலாம் ( மேலே உள்ள காட்சியை என்னைப் போல நீங்களும் ஐந்து தரமாவது பாப்பீங்க)

பாடல்களும் பாடல் வரிகளும் கேட்க கேட்க சுகம். `இஞ்சி இடுப்பழகி` பாட்டில் வரும் `புன்னை மரத்தினிலே பேடை குயில் கூவையிலே உன்னுடைய சோகத்தினை நா உணந்தேன்....`

கமலுக்கு ஒரு வேண்டுகோள் : 2ஆம் பாகம் எடுக்கலாமே!

எனது மதிப்பெண்கள்: 78/100

முழு படம் பார்க்க சுட்டி: http://www.youtube.com/watch?v=Fe4UpjYNAY0

வாசித்துவிட்டு விமர்சனம் சொல்லாம போனா எப்பிடிப்பா? கீழே கருத்தை சொல்லிவிட்டே போங்க!

ஆசிரியரைப்பற்றி:
ஆவண ஞானி இரா கனகத்தினம் அவர்கள் ஈழத்தில் குருமபசிட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர். 1956ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை கிட்டத்தட்ட 56 வருடங்களாக இலங்கைத்தமிழர் வரலாற்றை ஆவண வடிவமாகத் தொகுத்து வருவதை முழு நேர சேவையாக செய்துவருகிறார். 1890 முதல் 2011 வரையான 121 வருட வரலாற்று, அரசியல், கலாச்சார செய்திக் குறிப்புகள், நாழிதள்கள், படங்களை தனது வாழ்க்கையே அர்ப்பணித்து திரட்டியவர்.

தான் பிறந்த குரும்பசிட்டியிலும் பின்பு கண்டியிலும் ஆவணக்காப்பகத்தை நிறுவி தனிமனிதனாய்  2000 ஆண்டுவரை திரட்டிய இரா கனகரத்தினம் அவர்கள் இலங்கை இராணுவத்தின் கெடுபிடிகளால் கிளிநொச்சிக்கு காப்பகத்தை கொண்டு செல்லவேண்டியிருந்தது. அங்கு தமிழர் வரலாற்று வடிவங்களை திட்டமிட்டே அழித்து வரும் சிஙகளர்களால் ஒரு நூற்றாண்டு கால ஆவணங்களும் தீக்கிரையானதுஇதற்கு சில வருடங்களின் முன்பு 75 வீதமான் ஆவணங்கள் நுண்படச் சுருள்களாக ஆக்கப்ப்ட்டு அன்னிய தேசம் ஒன்றில் பாதுகாகப்படுவது மனதிற்கு ஆறுதல் அழிக்கிறது.

தமிழர் வாழும் தேசங்களில் எல்லாம் பண்பாடும் மொழியும் காப்பாற்றப் பட வேண்டும் என்ற உத்வேகத்துடன் உலகத்தமிழர் பண்பாட்டு கழகம் என்ற அமைப்பை 1974 ம் ஆண்டு வேறு சில அறிஞர்களோடு பல கெடுபிடிகளுக்கு மத்தியில் தாபித்தவர் திரு கனகரத்தினம் என்றால் மிகையாகாது. தமிழர் வாழும் தேசங்கள் என்றால் இந்தியா, இலங்கை, சிஙகப்பூர், மலேசியா என்று வரலாற்றாசிரியர்கள் கற்பித்துவந்த காலத்தில் அலைகடல்களுக்கு அப்பால் தமிழர் என்ற நூலினூடு இந்தொனேசியா முதல் கரிபியன் தீவுகள் வரை பரந்துவாழும் எமது உறவுகள் பற்றிய தகல்வகளை தந்தவர் இரா கனகரத்தினம் அவர்கள்.

தந்தை சொல்வநாயம் பற்றிய ஒரு புத்தகம்சீசரின் தியாகம் (1952), அலைகடல்களுக்கு அப்பால் தமிழர்(1983), உலத்தமிழர் ஐக்கியத்தை நோக்கி(1974), மொறிசியசு தீவில் எங்கள் தமிழர்(1980), இறீயூனியன் தீவில் எங்கள் தமிழர்(1989) ஆகிய நூல்களை ஏற்கனவே எழுதி உள்ளார்.

இலை மறை காயாக வாழ்ந்து ஈழத் தமிழ் வரலாற்றை ஆவணப்படுதும் இப் பெரியாரை வாழும் காலத்திலேயே கௌரவிப்பது தமிழர்கள் அனைவரது கடமையாகும்.

நூல் 1 : ஒரு குடையின் கீழ் உலகத் தமிழினம்
உலகத் தமிழர்களை ஒரு அமைப்பின் கீழ் கொண்டுவரவேண்டும் என்ற ஆசிரியரின் கொள்கையில் இருந்து உருவான இன்னூல் அனைத்து தமிழர்களும் படிக்க வேண்டிய ஒன்று. உலகத் தமிழர் இயக்கம் ஆரம்பிக்க ஏதுவான காரணங்களையும் அதனை ஸ்தாபிக்க உதவியவர்கள் பற்றியும் எவ்வாற்றான கெடுபிடிகளுக்கு மத்தியில் அவ் அமைப்பு உருவாக்கப்பட்ட்து என்றும் விரிவாக தனது மனப்பதிவுகளை முதலாவது பகுதியில் ஆசிரியர் விபரித்திருக்கிறார்.

இரண்டாவது பகுதியில்  உலகெங்கணும் பரந்துவாழும் தமிழர்களை  - முக்கியாமாக 18ஆம் நூற்றாண்ட்டில் இடம் பெயந்தவர்கள்  - பற்றிய செய்திகளை விபரமாக தொகுத்து வழங்கிகப்பட்டிருக்கிறது.  அலை கடல்களுக்கு அப்பால் பல சிறிய தீவுகளில் ஆங்கிலேயர்களாலும் பிரான்சியர்களாலும் குடியேற்றப்பட்ட மக்களின் தகவல்கள் வியப்படையச் செய்வதோடு இன்று  புலம் பெயந்த தமிழர்கள் தமிழ் மொழியை பண்பாட்டு விழுமியங்களை சந்ததிக்கு கொடுக்காமல் விட்டால் என்ன நடக்கும் என்பதையும் கடந்த கால வரலாறு ஐயமுற தெரிவிக்கிறது.

சிங்கப்பூர், மலேசியா, மியன்மார், அந்தமான் நிக்கொபார் தீவுகள், ரினிடாட், மார்த்தினிக், குவாட்லொப், சீசெல்ஸ், பிஜித்தீவுகள், தென் ஆபிரிக்கா, மொரிசியஸ், இறீயூனியன், இந்தொனீசியா வாழ் தமிழர்கள் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய ஆசிரியர் இன்னும் சில ஆய்வு செய்யப்படாத நாடுகளையும் பட்டியலிட்டிருக்கிறார்.

நூல் 2: ஒரு நூற்றாண்டு இலங்கைத்தமிழர் வரலாறு மைக்கிறோபிலிம்களில்
வரலாறு இன்றேல் தமிழர் வாழ்வே இல்லை என்ற ஆவணக்காப்பகத்தின் தாரக மந்திரத்தை புடம் போட்டுக்காட்டும் இக்கைநூல் தமிழர்கள் வரலாற்றை ஏன் ஆவணப்ப்டுத்தவேண்டும் என்ற கேள்விக்கு விடை காண்பதோடு ஆசிரியர் எப்படி ஆவண காப்பகத்தை உருவாக்கினார் என்ற வரலாற்றை விளக்குகிறது.

ஏலவே குறிப்பிட்ட்து போன்று ஒரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட இலங்கைத்தமிழர் வரலாறு மைக்கிறோபிலிம்களில் தொகுக்கப்படுள்ளது. ஆவணங்களை தொகுக்க ஆசிரியருக்கு உறுதுணையாகி நின்றவர்களின் பெயர்களும் ஆவணங்கள் சேகரிக்கப்பட்ட தினசரி, வார ஏடுகளின் பட்டியலும் தரப்படுள்ளன.

இலங்கையில் தோன்றி மறைந்த பல்வேறு சஞ்சிகைகள், வாரப் பத்திரிகைகள், பழந்தமிழ் ஏடுகள், காட்டூன்கள் மற்றும் செய்திகளின் மூலங்கள் எல்லாம் ஆவணக்காப்பத்தில் ஆவணப்படுத்தப்பட்டிருந்தன. தமிழர்களின் பல தலைமுறைகளுக்கு கிடைத்திருக்க வேண்டிய சொத்து ஒரு நாளில் தீயால் அழிக்கப்பட்டது

நார்வே நாட்டின் பண உதவியுடன்  75 வீதமான ஆவணங்கள் நுண்பட சுருளாக்கப்பட்டன. இவற்றில் ஒரு தொகுதி சுவிஸ்லாந்து யுனஸ்கோ ஆவணக்காப்பகத்தில் எதிகால சந்ததியினரின் பார்வைக்காக  வைக்கப்பட்டுள்ளன.   இன்னும் ஒரு பெரிய தொகுதி புகலிட நாட்டொன்றில் பாதுகாப்பாக உள்ளது. 25 வீதமான ஆவணங்கள் முற்றிலும் அழிந்து விட்டன. இந்த நுண்பட சுருள்களை பற்றி இக் கையேடு விளக்குகிறது.

இன்னூலை வாசித்த பிறகு இவ் ஆவணங்களை ஆசிரியரின் வாழ்நாளில் எல்லோருக்கும் பயன்படும்வகையில் வெளிக்கொண்டுவர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட ஆவல்.





தலைவர் இருக்கிறாரா இல்லையா?
ஒருநாள் வருவாரா இல்லையா?
தமிழ் ஈழம் சாத்தியமா இல்லையா?
போராட்டம் அழிய என்னகாரணம்?

ஆராச்சி செய்பவர்களே!
எங்களுக்கு இதைவிட
மிகவும் முக்கியமான
பணி உள்ளது உறவுகளே!

புலத்தில் வாழும் எமது
அடுத்த தலைமுறையை பாருங்கள்
அவர்கள் கதைக்கும் மொழிகள் எத்தனை?
அவர்கள் பழகும் நட்புக்கள் எத்தனை நாட்டவர்?
அவர்கள் படித்த பாடங்கள் எத்தனை?
அவர்கள் இல்லாத துறைகள் எது?

ஆயுதங்களை விடவும் பலமான
ஆயிரம் வழிகள் உண்டு
இளைய தலைமுறைக்கு
நாட்டை மீட்கும் பொறுப்பும் உண்டு

ஊடகத்துறை பற்றி நன்கு அறிந்தோற்கு
உணவு மட்டும் ஊட்டாமல் - விடுதலை
உணர்ச்சியையும் ஊட்டுவோம்
பலதைப் பற்றியும் வாதிடுவோர்க்கு
சுதந்திரம் பற்றியும் போதிப்போம்

அவர்களின் அப்பு ஆச்சியும்
பாட்டனும் பூட்டனும்
பூட்டனின் பூட்டனும்
கமம் செய்து வாழ்ந்த மண்

அவர்கள் பரம்பரை ஆண்ட மண்
அண்ணன் அக்காக்கள் பலர்
உயிர் கொடுத்து காத்தமண்  - அது
அவர்களின் உருத்து மண் என்றும்

அங்கு வாழும் உறவுகள்
அவர்களின் வேர்கள் என்றும்
அங்கிருக்கும் அடர்ந்த மரங்கள்
அவர்களின் பாட்டன் பாட்டி
கை பட்டவை என்றும்
தெரியப்படுத்துங்கள்
புரியப்படுத்துங்கள்

அன்பான உறவுகளே!
தமிழர் தாயகம் அது என்றும்
எதிரி ஆக்கிரமித்த பகுதி எது என்றும்
எங்கள் வரலாறு தொன்மையானதென்றும்
எங்கள் பண்பாடு பெருமையானதென்றும்
நீங்கள் தேடி அறிந்துகொள்ளுங்கள்
பின்னர்
பின்வந்தோர்க்கு கற்றுக்கொடுங்கள்

படங்களும் உண்மையில்லை – நெடுமையான
நாடகங்களும் உண்மையில்லை
நாங்கள் நாடு இழந்தது நிதர்சனம் - அதை
வீட்டு பாடமாய் புகட்டி வாருங்கள்

நேரமில்லை நட்புக்களே!
தமிழன் தாயகத்தில் பிறக்கும்
ஆக்கிரமிப்பாளன் பிள்ளை நாளை
தானே இன் நிலத்தின் மகன் என்பான்
புலத்தில வாழும்
உங்கள் பிள்ளையை எவன் என்பான்!

நாளைய சந்ததிக்கு 
உணர்வை ஊட்டுங்கள்
தர்மம் எதுவென்று
தாராளமாய் போதியுங்கள்
அவர்களில் இருந்து வருவான்
நாளைய தலைவன்

ஒருவரல்ல
ஒராயிரமாய்.
ஒவ்வொருவரில் இருந்தும்
ஒராயிரமாய்
வருவான் தலைவன்